நான் படாத பாடு - ஒரு நாயின் கதை

  I

  வழக்கமாக வீட்டிற்கு போகும்வழியில் தான் நான் அந்த நாயைப் பார்த்தேன். ஏதோ ஒரு வண்டியில் அடிபட்டு கழுத்தில் பலத்த காயம். எழுந்து நடக்கவும் வலு இல்லாமல் படுத்தபடி தன் தலையை மட்டும் முயற்சித்து உயர்த்தி, கூக்குரலிட்டு கதறி அழுதுகொண்டிருந்த நிலையில். கார்களும், பைக்குகலும் நிற்க இயலா வேகத்தில் நீண்டு செல்லும் அந்த கூட்டுச் சாலையில், தனியாய்த் தவித்திருந்தது அந்த நாய். அதன் அருகே, உதவ எண்ணி ஓரிரு மனிதர்களும் நின்றிருந்தனர்.

  வீதி வழியே விரைவாய்ச் சென்றுகொண்டிருந்த என்னையும் என் நண்பனையும், ஏங்கி அழைத்தாய் தோன்றிற்று அந்த நாயின் ஓலம். ஒரு நொடியில் நின்றுவிட்டோம். ஆனால் போல நொடிகள் யோசித்தோம், அருகில் சென்று உதவ முயல. முடிவாய் ஒரு முடிவெடுத்தோம் முன்சென்று உதவ.

  அருகில் சென்றோம். அந்த நாயின் அழுகை ஓலம் எங்களை உதவச் செய்தது என்றே உணர்ந்தோம். 'Blue Cross'க்கு போன் செய்தோம். பதில் இல்லை. அன்று மாட்டுப் பொங்கல் தினம்.  உதவ முன்வந்தோர் யாவரும் செய்வதறியாது நின்றனர்.

 'Blue Cross' அலுவலகத்துக்கு நேரிலே சென்று அழைப்போம் என முடிவானது. அதற்காய் முன்வந்த வாலிபனிடம் எங்கள் போன் நம்பரைத் தந்து அவனை அனுப்பி வைத்தோம். அரைமணி நேரம் காத்திருந்த பின் அவனிடம் இருந்து சேதி வந்தது. 'Blue cross' அதிகாரிகளுடன் புறப்பட்டு வருத்வாதாகச் சொன்னான்.

  அந்த அரை மணி நேரமும் அந்த நாய் பட்ட பாடு, நான் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் கேட்க விரும்பமாட்டேர்கள் என நம்புகிறேன். 

II

          ஒரு மஞ்சள் நிற லாரி ஒன்றில் அந்த வால்லிபனோடு, கரைகள் பல படிந்த காக்கி  உடையில் ஒரு இல வோது மனிதரும், கத்தி போல் இஸ்திரி செய்யப்பட உடையில் ஒரு மித வயது மனிதரும் வந்தனர். காக்கி உடையில் வந்தவர்(பெயர்: கோபி) வந்தவுடன் அந்த நாயை அக்கறையோடு ஒரு நோட்டமிட்டார். (அதிகாரி போல் தோன்றிய) உடன் வந்தவர் அருகில் இருந்த அடுக்கு மாடி கட்டிடங்களையும், விரைந்து சென்ற வாகனங்களையும் ஒரு வித ஏக்கத்தோடு பார்த்துவிட்டு, எங்களிடம் தன்னை 'ஜகதீஷ்' எனவும் தான் ஒரு அதிகாரி எனவும் மிடுக்குடன் அறிமுகப்படுத்திக்கொண்டார். 'இப்பவே எடுத்துக்குனு போன காப்பாதிரலாம் சார்!' என அவர் முன்னுரைக்கு முற்றுகையிட்ட கோபியிடம் எரிச்சலோடு முணுமுணுத்தார். உணர்ந்துகொண்ட கோபி, தவித்திருந்த நாயை ஆசுவாசப்படுத்தி, மயங்க வைத்து, அந்த நாயை அந்த வண்டியில் ஏற்றினார். உடன் செல்ல யாரும் முன்வராததால் நானும் அதனுள் ஏறிக்கொண்டேன்.

  புதிவித பயணம். இதுவரை அனுபவப்படாத ஒரு வித நாற்றம் அந்த வண்டியில். மருத்துவமனையின் மக்கிய குப்பையால் போல மூலையில் ஒரு சின்ன குவியல். மங்கலான ஒரு மஞ்சள் விளக்கின் ஒளியின் மயங்கிய நிலையில் அந்த நாயும், அது விழித்துக்கொல்லுமோ என்ற பயத்தில் தலை சாய்ந்தபடி, அதை கூர்ந்து நோக்கியபடி நானும்.

கோபி வண்டியை ஓட்ட,  ஜகதீஷும் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். ஏனோ தெரியவில்லை, அன்று தூக்கம் கண்ணை சொக்கியது. மிடுக்காய் நின்றுகொண்டிருந்த ஜகதீஷ் இப்போது கோபியோடு சிரித்துப் பேசுவ்தாய் தோன்றியது. கோபியின் குரல் மேலும் மேலும் மங்கத் தொடங்கியது. கர்ரென்று ஒலித்த அந்த வண்டியின் சத்தமும், கடகட சாலையில் குலுங்கி சென்ற வண்டியும், என்னை உலுக்க மறுத்து ஊசலாட்டியது.  உறங்குகிறேன் என்று உணர்வதற்குள் உறங்கிவிட்டேன். அது உரக்கமா இல்லை மாய மயக்கமா என இன்னும் தெரியவில்லை.

III

         மூடிய இமைகளை சோதித்துப் பார்க்கும் அளவு வெளிச்சம். மருத்துவமனை வாசம். காயம் பட்ட என் கைகளில் பஞ்சைத் தொட்டு மருந்து இடப்படுகிறது. இவை நான் விழித்தெழ முர்ப்படுகையில் உணர்ந்தவை. ஆனால் நடந்து அதுவன்று. விழித்துப் பார்க்கும்போதுதான் தெரிந்தது அது மருந்தல்ல. என் கையை அன்பால் நக்கும் அந்த நாயின் எச்சில். திடுக்கிட்டு நான் எழுந்தேன். அந்த நாய். அதே நாய். காயமில்லாமல் சோகமில்லாமல். நம்பமுடியவில்லை. கனவா என கிளளிகூட பார்த்துவிட்டேன். நிஜம்தான். அதிசயித்து நின்ற எனக்கு மேலும் அதிர்ச்சி, அந்த நாய் பேசியது தான்.

No comments:

Post a Comment